எதுவுமே பண்ணல.. அணியிலிருந்து நீக்கப்படும் ஜடேஜா? அவர் சொன்னத கவனிச்சீங்களா!

Ravindra Jadeja Cricket Indian Cricket Team Sports T20 World Cup 2024
By Jiyath Jun 26, 2024 11:02 AM GMT
Report

இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். 

ரவீந்திர ஜடேஜா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

எதுவுமே பண்ணல.. அணியிலிருந்து நீக்கப்படும் ஜடேஜா? அவர் சொன்னத கவனிச்சீங்களா! | Sunil Gavaskar About Ravindra Jadeja

இதன் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இந்தியா வெளியேறியது.

எனவே, இம்முறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. ஏனெனில், இந்த தொடரில் இதுவரை 10 ஓவர்களை வீசி 1 விக்கெட்டும், 3 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 16 ரன்களை மட்டுமே அவர் சேர்த்துள்ளார்.

IND vs ENG Semi-final: மழை பெய்ய 88% வாய்ப்பு - போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

IND vs ENG Semi-final: மழை பெய்ய 88% வாய்ப்பு - போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

சுனில் கவாஸ்கர்

இந்நிலையில் ஜடேஜாவின் இடம் குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் "ஜடேஜாவின் பேட்டிங், பவுலிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் அவரிடம் சிறந்த அனுபவம் இருக்கிறது.

எதுவுமே பண்ணல.. அணியிலிருந்து நீக்கப்படும் ஜடேஜா? அவர் சொன்னத கவனிச்சீங்களா! | Sunil Gavaskar About Ravindra Jadeja

தனக்கு கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல் ஃபீல்டிங்கில் மட்டும் 20 முதல் 30 ரன்களை தடுத்து நிறுத்தியுள்ளார் என்பதை மறக்க வேண்டாம். அவரின் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் மற்றும் ரன் அவுட்களை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது.

அவரின் ஃபீல்டிங்கால் 30 ரன்களை தடுத்துள்ள நிலையில், அவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் பங்களிப்புகள் இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஜடேஜாவின் இடத்தை கேள்வி எழுப்புவது குறித்து யாரும் சிந்திக்கக் கூட தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.