சுந்தர் பிச்சை சம்பளம் எவ்வளவு தெரியுமா? பாதுகாப்பு செலவே ரூ.69 கோடியாம்..
சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கான செலவு குறித்த தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர் பிச்சை
கூகுள் சிஇஓ-வாக பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் சுந்தர் பிச்சை. சமீபத்தில் கூகுள் நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷனுக்கு அறிக்கை ஒன்று தாக்கல் செய்திருந்தது.
அதில், கடந்த 2024ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு என்று கூகுள் நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 67.8 கோடி ரூபாய் செலவழித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தகவலின்படி,
பாதுகாப்பு செலவு
வீட்டின் பாதுகாப்பு, கன்சல்டேசன் கட்டணம், கண்காணிப்பு கட்டணம், தனிப்பட்ட விமானம், பயண பாதுகாப்பு ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளது. சுந்தர் பிச்சை 2024-ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை பெற்ற மொத்த சம்பளம் 10.73 மில்லியன் டாலர் (அதாவது சுமார் ரூ.89 கோடி).
இது கடந்த 2023-ஆம் ஆண்டில் பெற்ற 8.8 மில்லியன் டாலர் (சுமார் ரூ.73 கோடி) சம்பளத்துடன் ஒப்பிடுகையில் அதிகம். அவரின் அடிப்படை சம்பளம் மட்டும் 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.16.5 கோடி). 2023-இல் இந்த பாதுகாப்பு செலவு 6.78 மில்லியன் டாலராக இருந்தது.
அதனுடன் ஒப்பிட்டால் இது 22% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கூகுள் ஊழியரின் கடந்த ஆண்டு சம்பளம் 331,894 டாலர். இது 2023 ஐ விட 5% அதிகம். ஆனால், சுந்தர் பிச்சையின் சம்பளம் சராசரி ஊழியரின் சம்பளத்தை விட சுமார் 32 மடங்கு அதிகம்.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
