விவாகரத்தான 40 வயதான துபாய் யூடியூபரை திருமணம் செய்யும் சுனைனா? இவர் தான் மாப்பிள்ளையா!!

Sunaina Marriage Tamil Actress
By Karthick Jul 02, 2024 03:09 AM GMT
Report

சுனைனா

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா.முதல் திரைப்படம் ஹிட்டடித்த நிலையில், தொடர்ந்து வரிசையாக வெற்றி படங்களில் நடித்தார் சுனைனா.

actress Sunaina

நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் தமிழில் நடித்துள்ள சுனைனா, தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

actress Sunaina

நாயகியாக நடித்து வந்த போதே, நடிகர் விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் ஆனால் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட காட்சியில் நடித்திருந்தார்.

அண்மையில் நடிப்பில் "ரெஜினா" என்ற படத்திலும், இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். தற்போது 35 வயதை அடைந்துள்ள சுனைனா, ட்விட்டர் தளத்தில் locked என்ற caption இட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

மாப்பிள்ளை

அப்போதே ரசிகர்கள் அவருக்கு திருமணம் நடைபெறப்போவதாக பேச துவங்கினார்.அதனை தொடர்ந்து சுனைனா எந்த வித அறிவிப்பும் கொடுக்கவில்லை. தற்போது துபாயை சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்பவரை தான் சுனைனா திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sunaina khalid al ameri

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணத்திற்காக தான் அவர் துபாயிலிருந்து இருந்து இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இவரும் தனது நிச்சயதார்த்தத்தை குறித்து வெளியிட்ட புகைப்படம் போன்றே தான் சுனைனாவும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

35 வயதில் லக்கான பந்தம்!! காதலனுடன் புகைப்படத்தை பதிவிட்ட சுனைனா !!

35 வயதில் லக்கான பந்தம்!! காதலனுடன் புகைப்படத்தை பதிவிட்ட சுனைனா !!


துபாயை சேர்ந்த காலித் அல் அமேரி, தனது யூடியூப் சேனலில் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு 3 மில்லியன் ஃபாலோர்கள் இருக்கிறார்கள்.

Sunaina khalid al ameri

மம்முட்டியுடன் இவர் நடத்திய நேர்காணல், பெறும் வைரலானது. 40 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, அது விவகாரத்தில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.