பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகரிப்பு... குளிர் அதிகரிக்குமா..? - வானிலை ஆய்வு மையம் மறுப்பு

By Nandhini Jul 07, 2022 08:10 AM GMT
Report

சூரியன் - பூமி இடைவெளி

கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகரித்து வருவதால், பூமியில் குளிர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக மனிதர்களுக்கு உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் என்று சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கடும் குளிர் அலை வீச வாய்ப்பு இருப்பதாக எந்தவொரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் மறுப்பு

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், "சூரியனில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்லும் நிகழ்வு காரணமாக தமிழகத்தில் குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கவில்லை" என்று பதிவிட்டுள்ளது.       ‘

Sun - Bhoomi

எங்களை ஏமாத்திட்டாங்க... நடிகர் பிரபு மீது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு