செந்தில் பாலாஜி வழக்கை தீவிரப்படுத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் - 1500 பேருக்கு சம்மன் !
போக்குவரத்து துறை வேலைக்கு பணம் வாங்கிய வழக்கில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் மத்திய குற்றப்பிரிவு போலிசார்.
செந்தில் பாலாஜி கைது
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் 14-ம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்ப்பில் உள்ளார்.
வழக்கை தீவிரப்படுத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட இந்த வழக்கை இரண்டு மாத காலத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்திருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையின் முதற்கட்டமாக "மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 300 பேருக்கு சம்மன் அனுப்ப பட்டுள்ளதாகவும், 150 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், செந்தில் பாலாஜி கடந்த ஆ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது பணியமர்த்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் என ஒவ்வொருவராக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் பணிநியமனம் செய்யப்பட்டது எப்படி? பணிநியமனத்தின்போது இவர்கள் கொடுத்த ஆதாரங்கள்? என்ன, இவர்களின் கல்வித்தகுதி என்ன போன்ற விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பெறவிருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்திட்டுள்ளனர்.