மாணவர்களுக்கு happy news; பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடக்கம் - திறப்பு எப்போது?

Summer Season
By Swetha Apr 24, 2024 04:58 AM GMT
Report

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை 

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் 11,12ம் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இதை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு தொடங்கி நிறைவடைந்தது.

மாணவர்களுக்கு happy news; பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடக்கம் - திறப்பு எப்போது? | Summer Vacation For Schools From Today

இந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி தேர்வை விரைந்தது முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கேற்ப அட்டவணையும் வெளியிட்டது. அதன்படி கடந்த 12ம் தேதி நிறைவு பெறுவதாக இருந்தது.

ஆனால், ரமலான் பண்டிகை காரணமாக 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இவர்களைத் தவிர 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது.

கோடை வெயில் எதிரொலி - அரைநாள் மட்டுமே வகுப்பு - அரசு அதிரடி அறிவிப்பு

கோடை வெயில் எதிரொலி - அரைநாள் மட்டுமே வகுப்பு - அரசு அதிரடி அறிவிப்பு

திறப்பு எப்போது?

மாற்றிய அட்டவணைப்படி, 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முறையே அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்த நிலையில், இன்று முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.

மாணவர்களுக்கு happy news; பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடக்கம் - திறப்பு எப்போது? | Summer Vacation For Schools From Today

விடுமுறை எப்போது முடிந்து பள்ளி திறக்கப்படும் என்பதை குறித்த பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது. வருகின்ற ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.

அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லபடுகிறது. இருப்பினும், கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் திகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.