கோடை வெயில் எதிரொலி - அரைநாள் மட்டுமே வகுப்பு - அரசு அதிரடி அறிவிப்பு
கோடை வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கோடை வெயில்
மார்ச் மாதத்தில் துவங்கி கிட்டத்தட்ட ஜூன் மாதத்தின் இறுதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருப்பது வழக்கமே.
இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பெரும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.
அரை நாள்
அரசும் இதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதிலும் குறிப்பாக, பள்ளி மாணவர்களை காக்க, அரசு தனி கவனம் செலுத்தி வருகின்றது. அதன்படி தான் தற்போது தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடை காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரையில் மட்டுமே பள்ளி இயங்கும் என அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.