தனி ராணுவம், ஜெட் விமானங்கள், 300 சொகுசு கார்கள் - புதிதாக பதவியேற்ற மன்னர்!

Malaysia
By Sumathi Feb 01, 2024 09:23 AM GMT
Report

  மலேசியா மன்னராக சுல்தான் இப்ராஹிம் பதவியேற்றுள்ளார்.

சுல்தான் இப்ராஹிம்

மலேசியாவில் 13 மாகாணங்கள் உள்ளன. அதில் 9 மாகாணங்களில் அரச குடும்பங்கள்தான் உள்ளன. இந்த குடும்பங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியாவுக்கான மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

sultans house

அதனப்டி, ஜோஹர் மாகாணத்தின் சுல்தானாக பொறுப்பு வகித்துவந்த இப்ராஹிம் இஸ்கந்தார், தற்போது மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகின் பணக்கார அரச குடும்பம் இதுதான் - இங்கிலாந்து குடும்பம் இல்லையாம்.!

உலகின் பணக்கார அரச குடும்பம் இதுதான் - இங்கிலாந்து குடும்பம் இல்லையாம்.!

 சொத்து மதிப்பு

கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக அவருக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இவரது சொத்து மதிப்பு 5.7 பில்லியன் டாலர் (ரூ.47,300 கோடி). ரியல் எஸ்டேட், சுரங்கம் ஆரம்பித்து தொலைத் தொடர்பு வரை பலதரப்பட்ட துறைகளில் கொடிகட்டி பறந்து வருகிறார். டயர்சால் பூங்கா உட்பட சிங்கப்பூரில் 4 பில்லியன் டாலருக்கு (ரூ.33,200 கோடி) நிலம் உள்ளது.

sultan-ibrahim

பங்குச் சந்தையில் மட்டும் 1.1 பில்லியன் டாலர் (ரூ.9,150 கோடி) முதலீடு மேற்கொண்டுள்ளார். போயிங் உட்பட தனியார் ஜெட் விமானங்கள், 300 சொகுசு கார்கள், குடும்பத்திற்கென தனியாக ராணுவமே உள்ளது. நாட்டின் நிர்வாக அதிகாரம் பிரதமர் மற்றும் நாடாளுமன்றம் வசமே இருக்கும். மதம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு மன்னர் வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.