பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
நடிகை சுலோச்சனா லட்கர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுலோச்சனா மறைவு
பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர். அவருக்கு வயது 94. அவர் நடித்த ‘கோரா ஆர் காலா’, ‘சம்பூர்ண ராமாயணா’ ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். மராத்தியில் மட்டுமே 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, மகாராஷ்டிர பூஷன் என விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார். கடந்த சிலகாலமாக வயது மூப்பு தொடர்பான பிரச்சின்னைகளால் அவதிப்பட்டு வந்தார்.
பிரதமர் இரங்கல்
அதனால், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதம் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறக்க முடியாத நடிப்புத் திறன் நமது கலாச்சாரத்தை வளப்படுத்தியது மட்டுமின்றி தலைமுறைகள் கடந்தும் மக்களின் அன்பைப் பெற்றது. அவரது சினிமா மரபு அவரது படங்கள் மூலம் வாழும். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.