5 ஆண்டுகள் கழித்து வரும் சுக்ராதித்ய யோகம்..ஜூலையில் இந்த 3 ராசிகளின் நிலைமை இதுதான்!
ஜூலை மாதம் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என காண்போம்.
சுக்ராதித்ய யோகம்
ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையில் பல தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், கடக ராசியில் நுழையவுள்ளார். அதே சமயத்தில் அசுரர்களின் தலைவனாக கருதப்படும் சுக்கிரனும் கடக ராசியில் நுழையவுள்ளார்.
இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் அதாவது கடக ராசியில் ஒன்றிணைவது சுக்ராதித்ய யோகமாக உருவாகும். இந்த யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிகாரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரம் மற்றும் பங்குச் சந்தையில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் இருந்த வந்த பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்தும் நல்ல விஷயங்களை பெறுவீர்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் சுக்ராதித்ய யோகம் வந்துள்ளது. இதனால் இவர்களுக்கு தன்னம்பிக்கை,புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாரிக்க வாய்ப்பு வரும். திட்டமிட்டபடி வேலைகள் வெற்றிகரமாக முடியம்.
திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். குடும்ப சூழல் அமைதி மற்றும் நிம்மதியை கொடுக்கும். கூட்டு வேலைகளில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது.எனவே இந்த ராசிகாரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே பணி செய்வோர் வேளையில் அதிகம் கவனம் செலுத்தினால் நல்ல வெற்றியைப் பெறுவதோடு,
பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெற வாய்ப்புள்ளது. வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த யோக காலத்தில் நல்ல வேலை தேடி வரும். தொழிலதிபராக இருந்தால், நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு - இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)