இமாச்சலப் பிரதேசம்: 15வது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்பு

Indian National Congress Himachal Pradesh
By Sumathi Dec 11, 2022 10:58 AM GMT
Report

இமாச்சலப் பிரதேசத்தின் 15ஆவது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் வெற்றி

இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களை கைப்பற்றியது. பாஜக 25 தொகுதியைப் பெற்றது.

இமாச்சலப் பிரதேசம்: 15வது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்பு | Sukhwinder Singh Sukhu Cm Of Himachal Pradesh

இரு கட்சிகளுமே முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொண்டது. ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்திர சிங்கின் மனைவி பிரதீபா சிங் மற்றும் சுக்விந்தர் சிங் சுக்கு ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

பதவியேற்பு

முடிவில், காங்கிரஸ் முதலமைச்சாரக சுக்விந்தர் சிங் சுக்குவை தேர்வு செய்தது. தொடர்ந்து, சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.