சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்

By Irumporai Nov 05, 2022 08:47 AM GMT
Report

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியான் சரண் இன்று காலமானர். அவருக்கு வயது 106.

முதல் வாக்காளர்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் தேதலானது ஹிம்மாச்சல பிரதசேதத்தில் 1951 அக்டோபர் 25 ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அன்றைய தினம் நடத்தபட்ட தேர்தலில் வாக்களைத்த கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார். இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் அவர் என அறியப்பட்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம் | 106 Year Old Shyam Saran Passed Away

 அரசியல் தலைவர்கள் அஞ்சலி

தற்போது வரை நடத்தப்பட்ட தேர்தல்களில் தவறாது தனது வாக்கினை செலுத்தி வந்த நிலையில் , 2014ம் ஆண்டு இமாச்சலப் பிரதேச தேர்தல் ஆணையம் இவரை தங்கள் தூதராக நியமித்தது.

சுதந்திர இந்திய வரலாற்றின் பாரம்பரிய அடையாளங்களில் ஒருவராக மாறிப்போன ஷியாம் சரண் நேகி, தனது 106வது வயதில் தனது சொந்த கிராமமான கல்பாவில் காலமானார். அவரது மறைவுக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்