நீ என் செல்ல பொம்மை.. பிரபல நடிகைக்கு காதலன் எழுதிய காதல் கடிதம் - இணையத்தில் வைரல்!
பிரபல நடிகையின் காதலர் சிறையில் இருந்து கொண்டு தனது காதலிக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ்
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ். இவர் டாப் ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் சுகேஷ் சந்திரசேகர் என்ற தொழிலதிபரை காதலித்து சில காலம் லிவிங்கில் இருந்துள்ளனர்.
அப்பொழுது இவர் பல தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார், மேலும், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தாலும் அவருக்கு ஜாக்குலின் மீது இருந்த காதல் குறையவில்லை, அவர் தன் காதலிக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார்.
பிறந்தநாள் வாழ்த்து
இந்நிலையில், நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் பிறந்தநாளில் அவர் சிறையில் இருந்து எழுதி அனுப்பிய காதல் கடிதம் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர், "இந்த பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். நான் சீக்கிரம் வருவேன். அடுத்த வருடம் பிறந்தநாளை நாம் ஒன்றாகக் கொண்டாடுவோம்.
நான் அதை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். உலகம் பொறாமைப்படலாம். நீ என் செல்ல பொம்மை. நீ எனக்கு ஸ்பெஷல், நீ என் சூப்பர் ஸ்டார். நீ என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவள். பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடு. எதற்கும் பயப்பட வேண்டாம். நான் உனக்காக இருக்கிறேன். எனக்காக இன்னும் ஒரு துண்டு கேக் சாப்பிடு" என்று கூறியுள்ளார்.