காதலர் தினத்தில் கணவரை பிரிந்தார் பிரபல நடிகை - உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை ராக்கி சாவந்த் தனது கணவரை பிரிவதாக தெரிவித்துள்ள முடிவை கண்டு அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த் இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
சமீபத்தில் இந்தி பிக்பாஸ் சீசன் 15ல் கலந்து கொண்ட அவர் குறித்து ஏராளமான சர்ச்சை கருத்துகள் கிளம்பின. இந்நிலையில் தனது கணவரை பிரிந்து விட்டதாக நடிகை ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில் காதலர் தினத்திற்கு முன்பே இது நடந்திருக்க வேண்டும். இப்படி ஒரு நாளில் இந்த முடிவெடுத்ததில், நான் வருந்துகிறேன். மனம் உடைந்துவிட்டது. ரித்தேஷ் தம் வாழ்க்கையில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். எனது அடுத்த் வேலை, வாழ்க்கையில் நான் கவனம் செலுத்த வேண்டும். புரிந்துகொண்டு ஆதரவளித்ததற்கு எப்போதும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபரான ரித்தேஷை கடந்த 2019 ஆம் ஆண்டு 2வதாக திருமணம் செய்துக் கொண்ட ராக்கி சாவந்த் அவர் லண்டனில் வசிக்கிறார் என்றும், தனக்கு அற்புதமான கணவர் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியும் கூறி தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இந்தி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போது கணவர் ரிதேஷை அழைத்து வந்து ராக்கி சாவந்த் அனைவருக்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். ந்த நிலையில், கணவரை பிரிய முடிவு செய்து காதலர் தினத்தில் ராக்கி சாவந்த் எடுத்த இந்த முடிவு அவருக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.