சுகேஷூடன் நெருக்கம்.. திகார் சென்ற இரண்டு நடிகைகள் - சந்தித்தது எப்படி?

Money
By Sumathi Sep 27, 2022 12:28 PM GMT
Report

நடிகைகள் நிக்கி தம்போலி மற்றும் சோபியா சிங் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுகேஷ் சந்திரசேகர்

ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். திகார் சிறையில் சுகேஷ் இருந்த போது அவரை பாலிவுட் நடிகைகள் பலர் நேரில் வந்து சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளனர்.

சுகேஷூடன் நெருக்கம்.. திகார் சென்ற இரண்டு நடிகைகள் - சந்தித்தது எப்படி? | Sukesh Chandrasekhar Met Actresss In Jail

இது குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வருமான வரித்துறை அதிகாரிகள் அல்லது சிறை அதிகாரிகள் எங்களை தடுக்க மாட்டார்கள். நாங்கள் சிறையில் சுகேஷ் சந்திர சேகரை சுதந்திரமாக சந்திப்போம் என இந்த இரு நடிகைகளும் கூறியுள்ளனர்.

பாலிவுட் நடிகைகள்

இதில் 15 சிறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து தற்போது விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி, முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிங்கி இரானி மற்றும் ஒப்பனையாளர் லீபாக்ஷி எல்லவாடி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்னர் விசாரித்தனர்.

சுகேஷூடன் நெருக்கம்.. திகார் சென்ற இரண்டு நடிகைகள் - சந்தித்தது எப்படி? | Sukesh Chandrasekhar Met Actresss In Jail

இதற்கிடையில், குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் மற்றும் பிங்கியின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சனிக்கிழமை திகாருக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உட்பட மற்றவர்கள் சாட்சிகளாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சந்தித்தது எப்படி?

இது குறித்து, சிறப்பு காவல் ஆணையர் ரவீந்திர யாதவ் கூறுகையில், “சுகேஷ் முதன்மையாக சிறைக்குள் இருந்து செயல்படுவதை நாங்கள் கண்டறிந்தோம். சிறைக்குள் இருந்து பல நடிகைகளை ஏமாற்றியுள்ளார். இரண்டு நடிகைகளும் வாக்குறுதியளிக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்ததாகவும், ஆனால் ஏமாற்றப்பட்டதாகவும் கூறினார்கள்.

இரண்டு நடிகைகளும், இடைத் தரகர் சுகேஷ் மண்டோலி சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, நடிகைகள் சிறைக்குள் எப்படி நுழைவார்கள், சுகேஷை எங்கே சந்திப்பார்கள் என்ற விவரங்களை விசாரணைக் குழுவிடம் பகிர்ந்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தக் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், “சிறை பாதுகாப்பு நீண்ட காலமாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இவர்களை யாரும் தடுக்கவில்லை. இந்த வழக்கில் சில அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.