நடிகைகளுடன் உல்லாசம்.. ஸ்ரீதேவி மகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சுகேஷ் சந்திரசேகர்

Janhvi Kapoor Crime Sara Ali Khan
By Sumathi 2 மாதங்கள் முன்

மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கும் ஸ்கெட்ச் போட்டது அம்பலமாகியுள்ளது.

 சுகேஷ் சந்திரசேகர்

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன. மேலும், டெல்லி திகார் சிறையில் இருக்கும்போது தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை மோசடி செய்துள்ளார்.

நடிகைகளுடன் உல்லாசம்.. ஸ்ரீதேவி மகளுக்கு ஸ்கெட்ச் போட்ட  சுகேஷ் சந்திரசேகர் | Sukesh Chandrasekar Spend 20 Crores For Actress

இந்த வழக்கில், அமலாக்க அதிகாரிகள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் மோசடி செய்யும் பணத்தை வைத்து நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

மோசடி மன்னன்

இதற்கெல்லாம் அவருடைய உதவியாளர் பிங்கி இரானி உதவி செய்திருக்கிறார். அவர் உதவியாளர் மூலம்தான் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ்கு அறிமுகமாகியுள்ளார். 2 கார்கள், ஏராளமான விலையுயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை அவரிடம் இருந்து பெற்றிருக்கிறார்.

நடிகைகளுடன் உல்லாசம்.. ஸ்ரீதேவி மகளுக்கு ஸ்கெட்ச் போட்ட  சுகேஷ் சந்திரசேகர் | Sukesh Chandrasekar Spend 20 Crores For Actress

சுகேசை அவர் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஜாக்குலினின் மேலாளருக்கு அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 'டுகாட்டி' மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்ததாகவும் அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 ரூ.20 கோடி செலவு

இப்படி இவர் விரித்த வலையில் சிக்கியவர்கல்தான் நடிகைகள் நோரா பதேகி, அருஷா பாட்டீல், சோபியா சிங் உள்ளிட்டோர். அவர்களில் பலர், வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்நிலையில், சில முக்கிய நடிகைகளுக்கு இவர் ஸ்கெட்ச் போட்டது அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, பூமி பெட்னேகர், சாரா அலிகான் மற்றும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒருசிலர் பரிசுப்பொருட்களை பெற்றதோடு நிறுத்திக்கொண்டதாகவும் தெரிகிறது. இதன் அடிப்படையில், ரூ.20 கோடிக்கும் மேலாக பணம் செலவழித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.