முன்னாள் காதலருடன் நீங்கள் உறவு கொள்வீர்களா...? ஜான்வி கொடுத்த பதில் - ஷாக்கான ரசிகர்கள்
ஜான்வி
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர். தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். ஜான்விக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ஜான்வி.
ஜான்வி கொடுத்த பதில்
பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தற்போது ‘காஃபி வித் கரண்’ சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில்... பாலிவுட் வாரிசு நடிகைகளும், நெருங்கிய தோழிகளுமான சாரா அலி கானும், ஜான்வி கபூரும் சமீபத்தில கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இந்நிகழ்ச்சியில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது, ஜான்வி கபூரிடம். முன்னாள் காதலருடன் உடலுறவு கொள்வீர்களா என்று கரண் ஜோஹர் டக்கென்று கேட்டார். திகைத்துப்போன ஜான்வி, இல்லை... என்னால் பின்னோக்கிச் செல்ல முடியாது.. என்று பட்டென பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில், 2 நடிகைகளும் தாங்கள் மரணத்திற்கு அருகில் உள்ள பயணத் கடந்து வந்தது குறித்தும் சுவாரஸ்மாக பேசினார்கள். அப்போது, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்ய நான் ஆசைப்படுகிறேன் என்று சாரா பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.