மசூதியில் தொழுகையின்போது பயங்கர குண்டுவெடிப்பு - 32 பேர் மரணம்!

Pakistan Suicide Attack In Pakistan Death
By Sumathi Jan 30, 2023 11:29 AM GMT
Report

மனித குண்டுவெடிப்பு சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனித குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் பெஷாவர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் மாலை தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இது்தொடர்பாக காவல்துறையினர் அளித்த தகவலின் படி, அது தற்கொலை படை தாக்குதல் எனவும் அதில் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்துள்ளனர்,

மசூதியில் தொழுகையின்போது பயங்கர குண்டுவெடிப்பு - 32 பேர் மரணம்! | Suicide Bomb Attack In Pakistan 28 Died

120க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளர் எனவும் தெரிவிக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில், பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

28பேர் பலி

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரிப் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு இதற்கும் இஸ்லாம் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். மேலும், இது குறித்து ட்வீட் செய்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,

"தொழுகை வேலையில் மசூதியில் நடைபெற்ற இந்த தீவிரவாத தற்கொலை படை தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.