பகீர் கிளப்பும் மங்களூரு குண்டுவெடிப்பு - பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு!
குண்டு வெடிப்பு சம்பவத்தில் வயர்கள் இணைக்கப்பட்ட குக்கர் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்பு
கர்நாடகா, மங்களூரு நகர் நாகுரி பகுதியில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. தொடர்ந்து விசாரணையில், ஆட்டோவில் பயணித்தவர் முகமது ஷாரிக் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அதில் வெடிப்பொருட்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்பட்டது. மேலும், வெடிகுண்டை வேறு இடத்தில் வைத்து வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷாரிக் கோவையில் அண்மையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு இடத்திற்கு சென்றதும்,
அதிர்ச்சி தகவல்
அங்கே விடுதி ஒன்றில் 3 நாட்கள் தங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் காந்திபுரத்தில் தங்கி இருந்த விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தரிடம் பழகி அவருடைய ஆதார் ஆவணத்தை வைத்து சிம் கார்டு வாங்கி இருக்கிறார்.
மைசூருவில் உள்ள ஷாரீக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் பொருட்களும் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தால் கவரப்பட்ட ஷாரீக் அவரை இயக்கும் நபர்களை தொடர்பு கொள்ள டார்க் வெப்-ஐ பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இவர் குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு முன்பு குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனிடையே, கோவை மாநகர காவல்துறையினர் மங்களுருவில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மங்களூரு காவல்துறையினர் கோவையில் விசாரணைக்காக வந்துள்ளனர்.