‘காதலி எரித்த இடத்தில் என்னையும் எரித்து விடுங்கள் ’ - வீடியோ வெளியிட்டு 16 வயது சிறுவன் தற்கொலை
காதலி இறந்த துக்கத்தில் 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் கபிலன் என்ற ரவிசேகர் (16). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் கபிலன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் கபிலன் காதலித்த அப்பெண் உயிரிழந்துள்ளார். இதனால் கபிலன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
வீடியோ வெளியிட்டு தற்கொலை
இதனையடுத்து நேற்று வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கபிலன். அந்த வீடியோவில் என் காதலி இறந்து விட்டார். இதனால் நான் மிகுந்த வருத்தத்தில் உள்ளேன்.
இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என் காதலியை எரித்த இடத்திலேயே என்னையும் எரித்து விடுங்கள் என்று வீடியோவை வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
உடலை கைப்பற்றிய போலீசார்
இதனையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் கபிலன் உடலை எரிக்க சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசாருக்கு கொடுக்கப்பட்டது.
உடனடியாக சுடுகாட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் கபிலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
16 வயது சிறுவன் காதலி உயிரிழந்த துக்கம் தாங்காமல் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.