தன்னைத்தானே பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட தலைமை காவலர்
தன்னைத்தானே பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட தலைமை காவலரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சி
மீஞ்சூரைச் சேர்ந்தவர் யுவராஜ் (54). இவர் எண்ணூர் E4 காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
யுவராஜ் குடிபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து வந்ததால் கடந்த 2019ம் ஆண்டு அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த யுவராஜ், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்றார்.
அப்போது, யுவராஜிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. மிக நீண்ட நேரம் ஆகியும் யுவராஜ் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு
அப்போது, அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்திருந்தார். இதைப் பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.