அந்த பள்ளி வேண்டாம்... உடலில் பெட்ரோல் ஊற்றி 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
வேறொரு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்காததால் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனஉளைச்சலுக்கு ஆளான சஞ்சய்
திருவாரூர், பேரளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் காஷ்மீர் எல்லையில் இந்திய பாதுகாப்பு படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சஞ்சய் (15). அப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சய்க்கு நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் எழுத்துப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சஞ்சய்க்கு அந்த பள்ளியில் படிக்க விருப்பம் இல்லை. இதனையடுத்து, தன் பெற்றோர்களிடம் இந்த பள்ளி வேண்டாம். எனக்கு வேறொரு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று சஞ்சய் கூறியுள்ளார். ஆனால், பெற்றோர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்தார் சஞ்சய்.
பெட்ரோல் ஊற்றி தற்கொலை
இதனையடுத்து, நேற்று மாடிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சஞ்சய், மாடியில் பெற்றோர் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ உடலில் மளமளவென எரிந்ததால் சஞ்சய் அலறி கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது, சஞ்சய் தீயில் எரிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சஞ்சய் பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேறொரு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்காததால் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது.