அது எனக்கு பிடிக்கவில்லை.. அந்த படத்தை நினைத்து வெட்கப்படுகிறேன் - ஓப்பனாக பேசிய சுஹாசினி!
நடிகை சுஹாசினி தனது படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சுஹாசினி
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுஹாசினி. இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பின்னர், இவர் 1995ம் ஆண்டு இந்திரா என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ஹிட் ஆனது. இந்த படத்தில் இரண்டு கிராமத்திற்கு இடையே இருக்கும் சாதிவெறிக்கு எதிராக இந்திரா என்ற பெண் தனித்து போராடுவார். இந்த படம் இரண்டு மாநில விருதுகளை பெற்றது.
நடிகை பேட்டி
இந்நிலையில், நடிகை சுஹாசினி இவரது படம் குறித்து பேசியுள்ளார். அதில், "அந்த படத்தை உருவாக்கிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை, சாதி பிரச்சனையை மேம்போக்காக கையாண்டதை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றார். பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் கடந்து வந்த பாதை, அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை அவர்களின் படத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.
நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்ததால், அதன் தாக்கம் எனக்கு தெரியவில்லை. இன்று, இந்த இளைஞர்கள் அவர்களின் கருத்துகளாலும் விளக்கங்களாலும் வெற்றியடைந்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.