இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்... அவர்களிடம் பேச நாம் இந்தி கற்று கொள்ள வேண்டும் - நடிகை சுஹாசினி
கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள் அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன்.
இந்தி இனி தேசிய மொழி அல்ல என கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக, நடிகர் அஜய்தேவ்கான் தனது டுவிட்டர் பதிவில், உங்களின் கருத்துபடி இந்தி தேசியமொழி இல்லை என்றால் ஏன் கன்னட படங்களை மொழி மாற்றம் செய்து இந்தியில் வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் நமது தேசிய மொழி என இந்தியில் டுவீட் செய்திருந்தார்.
இதனையடுத்து, இந்த டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்த சுதீப், ‘இந்தியில் நீங்கள் அனுப்பிய கருத்து எனக்கு புரிகிறது இந்தி மொழியை நாம் அனைவரும் நேசித்து கற்றுக்கொள்வோம். குற்றமில்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா.?” என பதிலளித்தார்.
அதற்கு நடிகர் அஜய் தேவ் கான், ‘நீங்கள் என் நண்பர். நான் தவறாக புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. எப்போதும் நமது துறை ஒன்று என்றே நான் கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.
இதனால், சமூகவலைத்தளங்களில் இந்தி மொழி குறித்து சினிமா பிரபலங்கள் மோதிக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை சுஹாசினி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அவர்களுடன் நாம் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்று கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.