B.E., B.Sc., பட்டதாரிகள் கவனத்திற்கு..கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை - viral பேனர்!
கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ வைரலாகி வருகிறது.
ஆள் தேவை
தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தொழில்கள் வளர்ந்து வருகிறது. அதே சமயம் மக்களிடம் உடல் உழைப்பு குறைந்து வருகிறது. பெரும்பாலான தொழில்கள் இயந்திரமயமாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் வேலையை பார்ப்பதற்கு வேலையாட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நன்கு படித்த பட்டதாரிகளுக்கு கூட படிப்பிற்கு தகுந்த வேலை இல்லாத நிலைமை இருந்துகொண்டே இருக்கிறது.
viral பேனர்
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த பேனரில் “கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை சம்பளம் ரூ.18 ஆயிரம், வேலை நேரம் காலை 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை என்று எழுதப்பட்டுள்ளது. கல்வி தகுதி பிஇ, பிஏ, பி.எஸ்சி என்றும், வயது வரம்பு 25 முதல் 40 வரை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்வதற்கு கடை உரிமையாளர் தனது தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார். இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.