சுதா கொங்காரா இயக்கத்தில் தளபதி விஜய்? இதோ புது அப்டேட்..!

Sumathi
in பிரபலங்கள்Report this article
விஜய் தனது இயக்கத்தில் நடிக்கவேண்டும் என இயக்குனர் சுதா கொங்காரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
விஜய்
நடிகர் விஜய் தற்போது வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய விருது வென்ற இயக்குனர் சுதா கொங்கரா தளபதி விஜயை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில்..
இதனிடையே சமீபத்திய மேடை பேச்சு ஒன்றில், நடிகர் விஜய்யை இயக்கினால் அது இறுதிச்சுற்றுப் படம்போல அமையுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உடனடியாக விஜய்யை வைத்து தான் ஆக்ஷன் படத்தை தான் இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவரது ஆக்ஷன் மற்றும் டான்ஸ் தனக்கு மிகவும் பிடிக்கும். நான் கதை சொல்லி அது அவருக்கு பிடித்து கால்ஷீட் கிடைத்தால் கண்டிப்பாக இந்த கூட்டணி அமையும் என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.