திடீரென மருத்துவமனைக்கு ஓடிய நடிகர் விஜய்? - பதறிப்போன படக்குழு

Vijay Viral Video Varisu
By Nandhini 3 மாதங்கள் முன்

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பீஸ்ட் திரைப்படம்

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு உட்பட பலர் இணைந்து நடித்தனர்.

வாரிசு திரைப்படம்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66வது படமான வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகர் விஜய் பணியாற்றி வருகிறார். வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

vijay

மருத்துவமனையில் ஓடிய நடிகர் விஜய்?

வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு மருத்துவமனையில் நடிகர் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து பதறியபடி தள்ளிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திடீரென்று விஜய் மருத்துவமனையில் ஓடுவதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகுதான் இது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி என்று தெரிந்த பிறகு நிம்மதி அடைந்ததாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.