புரட்டிப்போட்ட கனமழை; இடிந்து விழுந்த ஏர்போர்ட் மேற்கூரை- பதப்பதைக்கும் காட்சிகள்!
அசாம் மாநிலம் விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏர்போர்ட் மேற்கூரை
அசாம் மாநிலம் கவுகாத்தியில் லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. நேற்று அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவந்துள்ளது. அப்போது, திடீரென விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பாதி இடிந்து விழுந்ததுள்ளது.
அந்த சம்பவம் நிகழும்போது, ஏராளமான பயணிகள் நின்று கொண்டு இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை எனவும் மழைநீர் வெளியேறும் குழாய் நிரம்பி வழிந்தது மற்றும் பலத்த காற்று காரணமாக மேற்கூரை விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.
பலத்த காற்று விசியதால் மேற்கூரையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூரியுள்ளனர்.
பதப்பதைக்கும் காட்சி
இந்த நிலையில், பயணிகள் அருகே மேற்கூரை விழுவது, நிலையத்தின் உள்ளே மழைநீர் அருவி போல் கொட்டுவது மற்றும் ஊழியர்கள் நீரை அகற்ற முயற்சிக்குமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய தலைமை அதிகாரி பேசுகையில், “பயணிகள் எந்த அசௌகரியத்தையும் சந்திக்காமல் இருக்க நான், தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணித்து வருகிறேன்.
புயல் மற்றும் பலத்த மழை காரணமாக, வானம் தெரிவுநிலை வெகுவாக குறைந்தது. இதன் காரணணாக 6 விமானங்கள் அகர்தலா மற்றும் கொல்கத்தாவுக்கு திருப்பிவிடப்பட்டன" என தெரிவித்தார்.