திடீர் நிலச்சரிவு .. இயற்கை ஆடிய கோர தாண்டவம் - மீளாத் துயரில் இந்தோனேசியா மக்கள்!

Indonesia World Cyclone
By Vidhya Senthil Dec 09, 2024 12:28 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பிரிபெஸ் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலசரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

10 killed in Indonesia landslide

மேலும், 5 பேர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். 2 பேர் மயமாகி உள்ளதாக அதிகாரிகள் மாயமாகி உள்ளனர். முன்னதாக கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால், மலையோர கிராமங்களில் மணற்பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்தது.

நள்ளிரவில் கிணற்றிலிருந்து கேட்ட மர்ம சத்தம்.. பதறி ஓடிய கிராம மக்கள் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

நள்ளிரவில் கிணற்றிலிருந்து கேட்ட மர்ம சத்தம்.. பதறி ஓடிய கிராம மக்கள் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

நிலச்சரிவு

இதில் 170-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இந்நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் 172 கிராமங்களை அழித்தது மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 killed in Indonesia landslide

இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் நெல் வயல்களை அழிந்து நாசமாகியுள்ளனர். ஏற்கனவே, இந்த வார தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவுகளால் 20 பேர் உயிரிழந்தனர்.