போருக்கு தயார்.. தைவானுக்கு போர் கப்பலை அனுப்பி சீனா பகிரங்க எச்சரிக்கை - எல்லையில் பதற்றம்!
தைவான் எல்லையில் சீனாவின் போர் கப்பல்கள், ராணுவ விமானங்கள் அனுப்பப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனா- தைவான் மோதல்
தைவான் தனது நாட்டில் இருந்து பிரிந்த ஒரு மாகாணமாகச் சீனா கருதி வருகிறது. மீண்டும் தைவானைத் தனது நாட்டுடன் இனைத்துக் கொள்ளச் சீனா விரும்புகிறது.ஆனால், அரசாங்கம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் தைவான் தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளது.
இதனால் சீனாவுடன் தைவான் இனைவதை மறுத்து வருகிறது.இந்த சுழலில், தைவான் அதிபர் லாய் சிங் தேவை பிரிவினைவாதி என்று சீனா பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் தைவானைப் பிரிவினை வாதத்தைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகச் சீனா தெரிவித்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தைவான் எல்லைப்பகுதியில் இராணுவ விமானங்கள் அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் மீண்டும் சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தைவான் எல்லையில் சீனாவின் போர்க் கப்பல்கள், ராணுவ விமானங்கள் அனுப்பி சீனா அச்சுறுத்தி வருகிறது
பதற்றம்
இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 24 மணி நேரத்தில்தைவான் எல்லையில் சீனாவின் 14 போர்க் கப்பல்கள், 7 ராணுவ விமானங்கள் மற்றும் 4 பலூன்கள் சுற்றி வந்துள்ளன.
இதில் ஏற்கனவே 8 போர் கப்பல்கள் இருந்த நிலையில் அது தற்போது 14ஆக அதிகரித்துள்ளது . இதுவரை சீன ராணுவ விமானங்களை 71 முறையும், கப்பல்களை 50 முறையும் தைவான் கண்டறிந்துள்ளது