ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் - அதிகாலையில் அலறிய மக்கள்!

Earthquake Jammu And Kashmir
By Thahir Apr 30, 2023 09:13 AM GMT
Report

ஜம்மு- காஷ்மீரில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறினர்.

நிலநடுக்கம் 

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Sudden earthquake in Jammu and Kashmir

இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மேலும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

அவசர செயல்பாடு மையங்கள் 

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் அதிக நில அதிர்வு மண்டலத்தில் விழுவதால் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க அனைத்து மாவட்டங்களிலும் அதிநவீன அவசர செயல்பாட்டு மையங்களை (EOC) அமைக்க முடிவு செய்துள்ளது.

மேலும், அங்குள்ள அரசு, டயல் எண் 112 இல் பேரிடர் அழைப்புகளை ஒருங்கிணைக்க அவசரகால பதில் ஆதரவு அமைப்பை (ERSS) செயல்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் NDMA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.