கப்பல்கள் மோதல் - 24 இந்திய ஊழியர்களுடன் சென்ற கப்பல் சிறைப்பிடிப்பு..!
மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று 24 இந்திய ஊழியர்களுடன் அமெரிக்கா சென்று கொண்டிருந்த நிலையில் ஈரான் கடற்படை சிறைபிடித்துள்ளது.
இந்திய ஊழியர்கள் சென்ற கப்பல் சிறைப்பிடிப்பு
இதுகுறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாக கூறி ஈரான் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

கப்பலையும், அதில் இருந்த ஊழியர்களையும் பத்திரமாக மீட்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பல் எங்கள் நாட்டின் கப்பல் மீது மோதியது.இதில் எங்கள் நாட்டைச் சேர்ந்த 2 ஊழியர்கள் காணாமல் போய் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா கண்டனம்
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா வளைகுடா கடல் பகுதியில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.