பாலியல் கொடுமை; 130 பெண்கள் தற்கொலை - என்ன நடக்கிறது?
பாலியல் கொடுமைகளுக்கு பயந்து, 130க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் கொடுமை
சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு எஸ்.ஏ.எப்., ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் - புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார்.
இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத படைக்கும் இடையே போர் வெடித்து வருகிறது. இந்த பயங்கரவாத குழுவுக்கு பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்கள் ஆதரவு அளித்து வருகின்றன. கடந்தாண்டு நிலவரப்படி, 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
130 பெண்கள் தற்கொலை
75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிற நாடுகளில் அகதிகளாக குடியேறியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மனித உரிமை ஆர்வலர் ஹலா அல்கரிப்,
மக்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளை ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத குழு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இதனால், வார்த்தைகளில் விவரிக்க முடியாத கொடுமைகளை சூடான் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.
உடல் ரீதியிலான சித்ரவதைகள் மட்டுமின்றி, கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதில் இருந்து தப்பிக்க 130க்கும் மேற்பட்ட பெண்கள் சூடானில் தற்கொலை செய்துள்ளனர் என அதிர்ச்சி தகவலை பகிந்துள்ளார்.