சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பட்டினியாக போட்டு கொடுமை
பள்ளி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சிவகங்கை, தேவகோட்டையைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தாயை இழந்ததால் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென சிறுமி காணாமல் போன நிலையில், புகாரை போலீஸார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எனவே தந்தையே தீவிரமாக தேடி பேருந்து நிலையத்தில் கண்டுபிடித்துள்ளார். அப்போது சிறுமி தன்னை கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அழுதுள்ளார். அதன்பின், போலீஸ் விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஷெரீஃப், திருவேகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜய்,
கொடூரம்
கார்த்திக் ஆகியோருடன் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோர் கூட்டாக அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. அதன்படி, 3 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
சிறுவனை மட்டும் இளம்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்னும் சில குற்றவாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர். சிறுமியுடன் மொபைலில் பேசியவர்களின் எண்கள் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன.