பலமுறை பாலியல் வன்கொடுமை - விடுதியில் மாணவியை தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர்
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கல்லூரி முதல்வர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கர்நாடகா, கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. லிங்கசுகுர் நகரிலுள்ள, சார் எம்.விஸ்வேஸ்வரய்யா ஜூனியர் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் இரவு விடுதியில் தனது அறையில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த மாணவிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
கொலை
அதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அந்தக் கல்லூரியின் முதல்வரும் அந்த விடுதியின் வார்டனுமான ரமேஷ் தலைமறைவானார். தொடர் தேடுதலில் ரமேஷைக் கைதுசெய்து விசாரித்ததில், உயிரிழந்த மாணவியை பலமுறை தனது அறைக்கு வரவழைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்திருக்கிறார்.
இதனால், மாணவி வேறு கல்லூரிக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தான் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து அவரைக் கொலைசெய்துள்ளார்.
அதன்பின், சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டு, மாணவி தற்கொலை செய்துகொண்டதுபோல நாடகமாடியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.