ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை - உணவுக்காக வரிசையில் நிற்கும் பெண்கள்!

Sexual harassment Crime Sudan
By Sumathi Jul 26, 2024 07:21 AM GMT
Report

பெண்கள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வரிசையில் நிற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப் போர்

சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது.

ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை - உணவுக்காக வரிசையில் நிற்கும் பெண்கள்! | Sudan Rape Sexual Violence And War Crimes

இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். RSF ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

போரினால் கைவிடப்பட்ட வீடுகளில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் பெண்களை வரிசையில் நிறுத்தி பாலியல் வன்கொடுமை செய்கின்றனர்.

சிறுவனின் நெகிழ்ச்சி செயல்; ஹெலிகாப்டரில் வந்து சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ராணுவம்!

சிறுவனின் நெகிழ்ச்சி செயல்; ஹெலிகாப்டரில் வந்து சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ராணுவம்!

பாலியல் வன்கொடுமை

மேலும், நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு இருப்பு வைக்கபட்டுள்ள நிலையில் அங்கு தங்களின் குடும்பத்துக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்ள வரும் பெண்கள் ராணுவ வீரர்காளால் இந்த வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

sudan

இதுகுறித்த பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கு வேறு வழி தங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவிக்கின்றனர். மேலும் ஒருவர் கூறுகையில், தான் அதற்கு மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக கூறுகிறார்.

கைவிடப்பட்ட வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று விற்று அதன்மூலம் உணவு வாங்க வேண்டும் என்றால் ராணுவ வீரர்களின் நிர்பந்தத்துக்கு அடிபணித்த பிறகே அனுமதி கிடைக்கும் என்ற நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.