460 பேர் பலி - ராணுவமே சொந்த நாட்டு மக்களை கொன்ற கொடூரம்!
ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்றுள்ளது.
உள்நாட்டு போர்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அரசு படைகளுடன் மோதும் துணை இராணுவப் படையினர்

வடக்கு தர்ஃபூர் மாகாணத்தின் தலைநகரான எல்-ஃபேஷரில் உள்ள சௌதி மகப்பேறு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
460 பேர் பலி
அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், குழந்தைகள் மற்றும் அவர்களை சந்திக்க வந்த உறவினர்கள் உட்பட 460-க்கும் அதிகமான மக்களை சுட்டு கொன்றதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து RSF-ன் தளபதி ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ, தமது வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2023 முதல் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் துணை இராணுவப் படையினரின் இந்த செயல், போர் குற்றம் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    