தப்பி ஓடிய வைரஸ் பாதித்த குரங்குகள் - நாட்டு மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

United States of America Virus ‎Monkeypox virus
By Sumathi Oct 30, 2025 04:27 PM GMT
Report

வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ள குரங்குகள் தப்பி ஓடியதால் அச்சம் எழுந்துள்ளது.

தப்பிய குரங்குகள்

அமெரிக்கா, முக்கிய நெடுஞ்சாலையான இன்டர்ஸ்டேட் 59 (Interstate 59)-ல் குரங்குகளை ஏற்றிச் சென்ற ஒரு ட்ரக் கவிழ்ந்தது.

இதில் தப்பி ஓடிய இந்தக் குரங்குகள் லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துலேன் பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டவை.

monkey

இந்தக் குரங்குகள் ஹெபடைடிஸ் சி (Hepatitis C) மற்றும் கோவிட்-19 (Covid-19) போன்ற பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால், இவை பொதுமக்களுக்குச் சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

திடீரென நீல நிறத்தில் மாறும் நாய்கள்; மிரண்ட மக்கள் - என்ன காரணம்?

திடீரென நீல நிறத்தில் மாறும் நாய்கள்; மிரண்ட மக்கள் - என்ன காரணம்?

வைரஸ் பாதிப்பு

இந்தக் குரங்குகள் சுமார் 40 பவுண்டுகள் (சுமார் 18 கிலோ) எடை கொண்டவை. தப்பி ஓடிய இந்தக் குரங்குகளை மக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும், அவற்றை எங்கு கண்டாலும் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடிய வைரஸ் பாதித்த குரங்குகள் - நாட்டு மக்களுக்கு கடும் எச்சரிக்கை! | Virus Carrying Monkeys Escape In America

தொடர்ந்து தப்பி ஓடிய குரங்குகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் அழித்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுவரை தப்பியோடியுள்ள ஒரு குரங்கைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்கிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.