சூடானுக்கு மருத்துவ உதவி - 8 டன் மருந்து பொருட்கள் சென்றடைந்தன!
சூடான் நாட்டிற்கு மருத்துவ உதவிக்காக 8 டன் மருந்து பொருட்களுடன் தரையிறங்கிய விமானம்.
சூடான் போர்
சூடான் நாட்டில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இந்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இதனால் அங்கு ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும் வெளிநாட்டவர்கள் தன் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக இடையில் போர் நிறுத்தம் அம்பலமானது.

அதனால் வெளிநாட்டவர்கள் தன் நாடு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போரால் மருத்துவ கட்டமைப்பே குலைந்து போய் உள்ளது, இதனால் ஏராளமான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
மருத்துவ உதவி
இந்நிலையில், ஜோர்டானில் இருந்து 8 டன் அவசர கால மருத்துவ உதவிக்கான பொருட்களுடன் விமானம் புறப்பட்டு சூடான் சென்றடைந்துள்ளது.

இவை 1000-க்கும் மேற்பட்டோர்க்கு சிகிச்சை அளிக்க இந்த மருந்துகள் போதுமானது என சர்வதேச செஞ்சிலுவை கமிட்டியின் ஆப்ரிக்க பிராந்திய இயக்குனர் பாட்ரிக் யூசுப் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan