சூடானில் உணவு தட்டுப்பாடு - மக்கள் கடைகளை நோக்கி படையெடுப்பு
சூடான் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் கார்டூம் நகரம் போர்க்களமாக மாறியுள்ளது.
சூடானில் இருந்து திரும்பும் மக்கள்
ராணுவத்திற்கும், துணை ராணுவப்படைக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சூடான் நகரில் ஏற்பட்டு வரும் உள்நாட்டு போரால் பல நாடுகளில் இருந்து அங்கு தங்கி பணிபுரிந்து வருபவர்கள் கடும் இன்னலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர். அமெரிக்கா சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்தில் நாடு திரும்ப கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா ஆப்ரேசன் காவேரி மூலமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. சூடானில் சிக்கியிருந்து 96 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
சூடானில் சிக்கியுள்ள சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு வருகிறது அந்நாட்டைச் சேர்ந்த ராணுவப்படை.
உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
இதே போன்று பல்வேறு நாடுகளைச் சேர்தவர்கள் தொடர்ச்சியாக சூடான் நாட்டை விட்டு வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பெரும்பாலான உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அந்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் வரும் காலங்களில் உணவு பஞ்சம் ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளதால் மக்களிடையே பெரும் கவலை நிலவி வருகிறது.
#السودان ? *استقرار الاحوال بدرجه كبيره في مناطق مختلفة داخل ولاية الخرطوم* pic.twitter.com/rLsh9j6ll8
— Sudan Post (@Sudan___News) April 27, 2023