தனுஷ் - மீனா திருமணம்? விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் - விளாசிய பிரபலம்!
சுசித்ரா, நடிகை மீனா குறித்து பேசியது பேசுபொருளாகியுள்ளது.
சுசித்ரா பேட்டி
பாடகி சுசித்ராவின் அண்மை பேட்டிதான் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. பல சம்பவங்களை ஓப்பனாக போட்டுடைத்துள்ளார்.
தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் இதை திருமணமான இரண்டு வருடத்திலேயே நான் கண்டுபிடித்தேன். சுசி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் மாட்டிவிட்டார்கள்.
இதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் மற்றும் என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் என்றெல்லாம் தெரிவித்துள்ளார். அந்த வகையில், தனுஷ், மீனா திருமண செய்தி குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் அந்தணன்,
தனுஷ் - மீனா
சுசித்ரா, தனுஷ்- மீனா குறித்து பேசி இருந்தார். இது என்ன மனநிலையில் அவர் சொன்னார் என்று தெரியவில்லை. அதை கேட்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஏன் என்றால், ஏற்கனவே தனுஷ் விவாகரத்து செய்து இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் அவர் குறித்து பல செய்திகள் இணையத்தில் பரவி வரும் இந்த நேரத்தில், சுசித்ரா சொன்னது, உண்மையா பொய்யா என தெரியாத ஒரு இடத்தில் நம்மை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். அவர் போகிற போக்கில் இதை சொல்லி இருந்தாலும்,
இது போக போக விஸ்வரூபம் எடுக்கும்.
சுசித்ரா யாரோ ஒரு பெண்ணாக இருந்து இருந்தால், இந்த விஷயம் இந்த அளவிற்கு பேசுபொருளாகி இருக்காது. அவர் சினிமாவில் 20 ஆண்டுக்கும் மேலாக இருந்தவர், தனுஷ், த்ரிஷா என அனைவருடனும் பழகியவர் என்பதால், இந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து விட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.