கணவர் இல்லாத போது விஷால் போதையில் வீட்டிற்கு வந்தார் - சுசித்ரா பரபரப்பு குற்றச்சாட்டு
விஷாலின் நிலையை பார்க்கும் போது சந்தோசமாக இருப்பதாக சுசித்ரா தெரிவித்துள்ளார்.
விஷால்
விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரான மத கஜ ராஜா படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விஷால் பேசும் போது வழக்கத்திற்கு மாறாக அவரது கை நடுங்கியதோடு, அவரது பேச்சிலும் தடுமாற்றம் இருந்தது. விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது.
சுசித்ரா
விஷாலின் நிலையை பார்த்த ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்தனர். இந்நிலையில் விஷாலின் இந்த நிலையை பார்க்கும் போது, சந்தோஷமாக இருப்பதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நான் கார்த்திக் குமாரோடு வாழ்ந்த போது ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத போது கையில் ஒயின் பாட்டிலோடு போதையில் வந்து விஷால் என் வீட்டுக் கதவைத் தட்டினார். கையில் இருந்த ஒயின் பாட்டிலை கொடுக்க வந்ததாக விஷால் சொன்னார். கார்த்திக் குமார், கவுதம் மேனன் அலுவலகத்தில் இருப்பார் என்று சொல்லி அனுப்பி கெட்ட வார்த்தையில் திட்டினேன்.
அப்போது ஏதாவது சொன்னிங்களா என கேட்டார். இல்லை ஒரு பூனை அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை கொடுக்குது நீங்க போங்க என்று சொல்லி அனுப்பி விட்டேன். அன்றைக்கு பாட்டிலோடு வந்த கைதான் இன்று நடுங்கிகிறது என கூறினார். சுசித்ரா விஷால் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.