பிரபல நடிகையை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குநர் - கொந்தளிப்பு!
படத்தில் நடிக்க வாய்ப்புக்காக இயக்குநர் ஒருவர் அறைக்கு அழைத்ததாக நடிகை தெரிவித்துள்ளார்.
சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி
பாலிவுட்டில் பிரபல நடிகைகளுள் ஒருவர் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. பிரபலமான நடிகர்களாக உள்ள ஷாருக்கான், அனில் கபூர் உள்ளிட்ட பலருடன் படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். சில தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, டெலிவிஷன் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் வலம் வருகிறார்.
1999ல் பிரபல இயக்குநர் சேகர் கபூரை திருமணம் செய்து 2007ல் விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் அண்மையில் பேட்டியில் பகீர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பதற்காக ஒரு இயக்குநரை பார்க்க ஹோட்டலுக்கு சென்றேன்.
அதிர்ச்சி தகவல்
படத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஹோட்டலில் சந்திப்பது அப்போது சகஜம். அந்த இயக்குநர் தன்னிடம் ‘நீ அம்மாவுடன் நெருக்கமாக இருப்பாயா அல்லது அப்பாவுடன் நெருக்கமாக இருப்பாயா?’ என கேட்டார். ‘நான் அப்பாவுடன் நெருக்கமாக இருப்பேன்’ என கூறினேன். அப்போ சரி,
உன் அப்பாவிற்கு போன் செய்து நாளை காலை உன்னை வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று சொல். அவர் தன்னிடம் என்ன கூறினார் என்பது தனக்கு புரிவதற்கு சற்று நேரம் பிடித்தது.
பின்னர் அவரது எண்ணம் தனக்கு புரிந்து விட்டது. வெளியில் சென்று எதையோ எடுத்து வருகிறேன் என கூறி, அப்படியே ஓடி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த கர்ப்பிணி அரச அதிகாரி: கணவர் ஐந்து மாதங்களின் பின் அதிரடி கைது IBC Tamil

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து IBC Tamil
