ஹோட்டல் அறைக்கு அழைத்தார் - வித்யா பாலன் அதிர்ச்சி தகவல்
வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.
வித்யா பாலன்
பெங்காலி மொழியில் ‘பலோ தேகோ’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். இதனை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், ‘பரிநீதா,’ தமிழில் ரன் படம் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருப்பார்.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர், மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.
பாலியல் தொல்லை
அந்த படத்தின் இயக்குனரை விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்தபோது நான் சந்தித்தேன். காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்றேன். ஆனால் அவர் ஒட்டல் அறைக்கு போய் பேசுவோம் என்றார். ஒட்டல் அறைக்கு வரும்படி என்னை கட்டாயப்படுத்தினார். அவரது எண்ணம் புரிந்தது.
எனவே ஒட்டல் அறைக்கு சென்று அறைக்கதவை மூடாமல் திறந்து வைத்துக்கொண்டே அவரிடம் பேசினேன். நான் கதவை மூடுவேனா என்று பார்த்தார். ஆனால் கடைசி வரை மூடாமல் இருந்தேன் நான் கதவை மூடாமல் இருந்ததால் ஒத்துழைக்க மாட்டேன் என்று புரிந்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவரது படத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.