என் கணவருடன் ஒரே ரூமில் தனுஷ்...தன்பாலின ஈர்ப்பாளர் அவர்? அதிரவைக்கும் சுசித்ரா!!
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வரும் பின்னணி பாடகி சுசித்ரா, தற்போதும் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளார்.
சுசித்ரா
பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா, பாடல்களை பாடுவது மட்டுமின்றி பின்னணி குரலும் அளித்து வருகிறார். சுசி லீக்ஸ் என்ற பெயரில் பெரும் பிரச்னையும் இவரை தொடர்புபடுத்தி கிளம்பியது.
தற்போதும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவரும் சுசித்ரா, அண்மையில் அளித்த பேட்டி சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.
தனுஷ்
அதில், அவர் பேசும் போது, என்னுடைய முன்னாள் கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் என அதிரடியாக பேசி பூகம்பத்தை கிளப்பியுள்ளார். அதில் மிகவும் முக்கியமான விஷயம் அவர் நடிகர் தனுஷை இதில் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷும் கார்த்திக்கும் ஒரே அறையில் என்ன பண்ணிட்டு இருந்தாங்க ரூம்'ல? என கேள்வி எழுப்பிய சுசித்ரா 12 வருடங்களாக தான் கார்த்திக் குமாரிடம் இருந்து விவாகரத்து கேட்டதாகவும், தன்னுடைய டாக்டரே தன்னிடம் கார்த்திக் குமார் ஒரு gay என சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததாக கூறினார்.
நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவரும் "யாரடி நீ மோகினி" படத்தில் இணைந்து நடித்திருந்தனர். கார்த்திக் குமார் மற்றும் சுசித்ரா இருவருக்கும் 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2017-இல் விவகாரத்து பெற்று விட்டனர் என்பதும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.