பல பெண்களோடு அப்படி என்ன உனக்கு?? தனுஷ் விவாகரத்து - விளாசிய தயாரிப்பாளர்

Karthick
in பிரபலங்கள்Report this article
தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனுஷ்
தமிழ் சினிமாவில் தாண்டி, தற்போது இந்திய மொழி படங்களில் பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் தனுஷ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் ஹிட் கொடுத்துள்ள அவர், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
இயக்கம் பக்கமும் தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ள தனுஷ், ராயன் படத்தையும், அதனை தொடர்ந்து "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" போன்ற படங்களை இயக்கி வருகின்றார். நடிப்பு, இயக்கம் என சினிமாவில் சுழன்றடித்து பணியாற்றி வரும் தனுஷின் தனிப்பட்ட வாழக்கை சற்று சோகமானதாக உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த தனுஷ், 18 ஆண்டுகள் கழித்து தற்போது விவகாரத்தில் பந்தத்தை முடித்துள்ளார். ரஜினியின் தீவிர ரசிகர், காதல் திருமணம் என சிறப்பாக சென்ற வாழ்வில் எந்த இடத்தில் பிரச்சனை உருவானது என்பது தெரியவில்லை.
சினிமாவில் தனுஷ் கதாநாயகிகளுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார். அது தான் இவர்களின் விவாகரத்திற்கு காரணம் என்றெல்லாம் பல் தகவல்கள் வந்தன. இந்த சூழலில் தான், பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் தனுஷை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, தனுஷிடம் இந்த விஷயம் குறித்து நேரடியாகவே கேட்கிறேன். பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை வாழ வேண்டும்? என சகட்டு மேனிக்கு விளாசினார் கே.ராஜன்.
மேலும், தனுஷ் எல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா எல்லாம் ஒரு பொம்பளையா? என கொந்தளித்த அவர், பிறர் சொல்லும் அளவுக்கு ஏன் வாழ வேண்டும்? என்றும் இருவரிடத்திலும் கேள்வி எழுப்பினார்.