லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்; கமல் எழுதிய பாராட்டு கடிதம் - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!

Kamal Haasan Only Kollywood Lokesh Kanagaraj Vikram Movie
By Sumathi Jun 07, 2022 12:22 AM GMT
Report

தனிப்பட்ட முறையில் லோகேஷ் கனகராஜுக்கு கமல் பாராட்டி எழுதிய கடிதத்தை லோகேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனிப்பட்ட முறையில் லெட்டர்

லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்; கமல் எழுதிய பாராட்டு கடிதம் - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி! | Success Of Vikram Kamal Has Written A Letter

இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, நன்றி ஆண்டவரே என்று கமலைக் குறிப்பிட்டுள்ள லோகேஷ் இந்த கடிதம் தனக்கு லைஃப் டைம் செட்டில் மென்ட் என்று கூறியுள்ளார்.

விக்ரம்

லோகேஷை விட கமலை இப்படியொரு மாஸ்ஸான கேரக்டரில் கொண்டு வர யாராலும் முடியாது என்பதை கடந்த வாரம் வெளியான விக்ரம் திரைப்படம் நிரூபித்துள்ளது.

கோபம், அழுகை, கண்ணீர், காமெடின், ஹியூமர் சென்ஸ் என மொத்த வித்தைகளையும் கமல் இந்த படத்தில் இறக்கியிருப்பார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் கமலை வேற லெவலில் காட்டிய லோகேஷ் கனகராஜை கமலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவ்வளவு பெரிய சம்பவத்தை செய்திருந்தாலும், லோகேஷ் மிக நிதானமாக எளிமையான முறையில் நேர்காணலை அளித்து வருவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

இதற்கிடையே லோகேஷுக்கு கமல் தனிப்பட்ட முறையில் எழுதியுள்ளார். அதனை கமலின் அனுமதியுடன் ட்விட்டரில் லோகேஷ் பதிவிட்டுள்ளார்.

#MeToo கொடுமைகளை புத்தமாக எழுதிய பாலிவுட் நடிகை - அதிர்ச்சி தகவல்கள்!