இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா; பேசாமல் தூதராகிடலாமே மோடி- சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!

Narendra Modi China India X
By Swetha Apr 03, 2024 12:42 PM GMT
Report

பிரதமர் சீனாவுக்கு தூதராக பணியாற்றலாமே என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி சாட்டியுள்ளார்.

ஆக்கிரமிக்கும் சீனா

இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. அந்த வகையில், அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு சீன மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், அவற்றை தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது.

இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா; பேசாமல் தூதராகிடலாமே மோடி- சுப்பிரமணியன் சுவாமி காட்டம்! | Subramanian Swamy Strongly Criticized Modi

அண்மையில், இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியமைத்துள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சீண்டும் சீனா; இந்தியா கிராமங்களுக்கு சீன மொழியில் பெயர்- கொதிக்கும் இந்தியா!

சீண்டும் சீனா; இந்தியா கிராமங்களுக்கு சீன மொழியில் பெயர்- கொதிக்கும் இந்தியா!

சுப்பிரமணியன் சுவாமி 

இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல அரசியல் கட்சிகள் கையில் எடுத்து பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா; பேசாமல் தூதராகிடலாமே மோடி- சுப்பிரமணியன் சுவாமி காட்டம்! | Subramanian Swamy Strongly Criticized Modi

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், சீனா தங்கள் விருப்பப்பட்டபடி அருணாச்சல பிரதேசத்தில் இருந்து லடாக் வரையிலான இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது.

மோடி தனது சிவந்த கண்களை காண்பித்ததால் யாரும் இந்திய பகுதிக்குள் வரவில்லை. நாமும் ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார். தேவையின்றி சத்தமிட்டு கொண்டிருக்கும் பிரதமர் மோடி, சீனாவுக்கான இந்திய தூதராவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.