மோடி ஜெயிக்ககூடாது... தோற்கவேண்டும் - மூத்த தலைவர் ஆதங்கம் - பாஜகவில் உட்கட்சி பூசல்
பாஜகவில் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக பல கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றவர் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
பாஜக பிரமுகர் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியது வருமாறு,
தமிழகத்தின் பாஜக வேட்பாளர்களில் நயினார் நகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்து, அண்ணாமலை வெற்றி குறித்தெல்லாம் விசாரணை செய்யவில்லை என்றார்.
தமிழகத்தில் திமுக - பாஜக என களம் மாறுவது என்பது அனைவரது கனவு - ஆனால், அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக்கூறினார்.
தோற்கடிக்கப்படவேண்டும்
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவாரா என கேள்விக்கு, மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது, அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
பிரதமர் மோடி இந்தியாவில் சீனா ஆக்கிரமிப்பு செய்த போது தடுக்கவில்லை என குற்றம்சாட்டி, பொருளாதார ரீதியாக நாடு பின்தங்கி விட்டதாக குறிப்பிட்டு மாலத்தீவுடனான பிரச்சனையில்மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறை கூறினார்.