ஏன் தடுக்குறீர்கள் - சீனா ஆக்கிரமிப்பு பற்றி அறிந்து கொள்ள கூடாதா? மோடி அரசுக்கு சுப்ரமணியன் சுவாமி கேள்வி

BJP Narendra Modi Government Of India India
By Karthick Jul 30, 2024 02:42 AM GMT
Report

பாஜகவில் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக பல கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றவர் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

சுப்பிரமணியன் சுவாமி

3-வது மோடி தலைமையிலான அரசு ஜெயிக்கவே கூடாது என்றெல்லாம் பேசி வந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. தொடர்ந்து பாஜக அரசு மீது எதிர்கட்சிகளால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு சீனா ஆக்கிரமிப்பு.

மோடி ஜெயிக்ககூடாது... தோற்கவேண்டும் - மூத்த தலைவர் ஆதங்கம் - பாஜகவில் உட்கட்சி பூசல்

மோடி ஜெயிக்ககூடாது... தோற்கவேண்டும் - மூத்த தலைவர் ஆதங்கம் - பாஜகவில் உட்கட்சி பூசல்

அது தொடர்பான ஒரு கேள்வி தற்போது சுப்பிரமணியன் சுவாமி எழுப்பியுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் தளப்பக்க பதிவில்,

சர்ச்சைக்கு இடமில்லாத லடாக்கில் 4064 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா சமீபத்தில் ஆக்கிரமித்துள்ளதன் உண்மையை நீதிமன்றத்தில் இருந்து அறிய என்னை ஏன் எதிர்க்கிறது தடுக்கிறது மோடியின் அரசாங்கம்? என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. காந்திக்கு சீனாவுடன் ஒப்பந்தம் இருப்பதால் காங்கிரஸ் இந்த விஷயத்தை எழுப்பவில்லை. ஒப்பந்தத்தில் மோடி இருக்கிறாரா?

என பதிவிட்டுள்ளார்.

Subramanian Swamy

முன்னதாக, ஜூலை 16 தேதி அன்று, ஜம்மு - காஷ்மீர் தோடாவில் ஐந்து இராணுவ வீரர்களின் உயிரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலில் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் விமர்சித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.